இந்திய பிரபல நடிகர் மோகன்லால் இலங்கை நாடாளுமன்றத்தில்

இந்திய பிரபல நடிகர் மோகன்லால் இலங்கை நாடாளுமன்றத்தில்

தென்னிந்திய நடிகர் மோகன்லால் இன்று(19.06.2025) இலங்கை நாடாளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளார். 

பிரபல மலையாள நடிகர்களான மோகன்லால் மற்றும் குஞ்சாக்கோ போபன் ஆகியோர் படப்பிடிப்பிற்காக கடந்த 15ஆம் திகதி இலங்கை வந்தனர்.

இந்தியாவின் கொச்சியிலிருந்து UL-166 என்ற ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் விமானத்தில் கட்டுநாயக்கவை அவர்கள் வந்தடைந்தனர்.  

பேட்ரியட்’ (Patriot) எனும் திரைப்படத்தின் மூன்று நாட்கள் படப்பிடிப்பில் கலந்துகொள்வதற்காக அவர்கள் இலங்கை வந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இலங்கை படப்பிடிப்புக்கு மிக சிறந்த இடங்களை வழங்குவதோடு வேலை செய்ய மிகவும் நட்பான இடம் என மோகன்லால் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், மோகன்லால் இலங்கை நாடாளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

manel

Related Posts