சாமர சம்பத் மீண்டும் விளக்கமறியல்
பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவை எதிர்வரும் மே மாதம் 5 ஆம் திகதி வரை மீளவும் விளக்கமறியலில் வைக்குமாறு பதுளை நீதவான் நுஜித் டி சில்வா இன்று (21) உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கடந்த மாதம் 27 ஆம் திகதி 3 குற்றச்சாட்டுக்களின் கீழ் கைதான சாமர சம்பத் கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி (Tanuja Lakmali) முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டு இரண்டு குற்றச்சாட்டுக்களுக்காக பிணை வழங்கப்பட்ட போதிலும் மற்றுமொரு குற்றச்சாட்டுக்காக அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டிருந்தார்.
இதன்படி இம்மாதம் 08ஆம் திகதி வரை சாமர சம்பத்தை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் தனுஜா லக்மாலி உத்தரவிட்டார்.
இந்நிலையில் சாமர சம்பத் தசநாயக்கவை எதிர்வரும் மே 5 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கு மறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பிலேயே சாமர சம்பத் தசநாயக்கவுக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

