கடலில் நீராடச்சென்ற சிறுவன் மாயம்
கல்கிஸை கடலில் நீராடச்சென்ற சிறுவன் ஒருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளதாக கல்கிஸை பொலிஸாருக்கு தகவல் கிடைத்ததையடுத்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கங்கொடவில பிரதேசத்தைச் சேர்ந்த 16 வயது சிறுவன் ஒருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சிறுவன் நண்பர்களுடன் கடலுக்கு நீராடச் சென்றிருந்த வேளையிலேயே நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக தெரியவருகிறது.
பொலிஸ் உயிர்காக்கும் பிரிவு மற்றும் கல்கிஸை பொலிஸ் அதிகாரிகள் இணைந்து சிறுவனை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கிஸை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

