ஏமனில் வெடிகுண்டு வெடிப்பு -5 சிறுவர்கள் பலி

ஏமனில் வெடிகுண்டு வெடிப்பு -5 சிறுவர்கள் பலி

தென்மேற்கு ஏமனில், நேற்று குடியிருப்பு பகுதியில் கால்பந்து விளையாடிக் கொண்டிருந்தபோது, 5 சிறுவர்கள் வெடிகுண்டு வெடித்ததில் பலியாகினர். 

அரசாங்கத்துடன் இணைந்த இஸ்லாக் கட்சியின் ஆதரவு போராளிகளால் நடத்தப்பட்ட தாக்குதலிலேயே இந்த சிறுவர்கள் கொல்லப்பட்டனர் என்ற தகவல் வெளியாகியுள்ள போதிலும், அந்த தகவல் உறுதிப்படுத்தப்படவில்லை. 

இதேவேளை, யுக்ரைன் மீது நேற்று ஒரே நாளில் மாத்திரம் ரஷ்யா 620 ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏவுகணைகளைப் பயன்படுத்தித் தாக்குதல் நடத்தியுள்ளது. 

இதில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். 

இது தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள யுக்ரைன் ஜனாதிபதி வொலோடிமீர் செலன்ஸ்கி, நாட்டின் பல பகுதிகளில் ரஷ்யா கடுமையான தாக்குதல்களை மேற்கொண்டதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். 

manel