தேசிய மக்கள் சக்தியின் அமைப்பாளரிடம் மன்னிப்பு கோரிய இ.தொ.கா உறுப்பினர்.
தேசிய மக்கள் சக்தியின் பொகவந்தலாவ மாவட்ட அமைப்பாளரிடம் இலங்கை தொழிலாளர் காங்ரஸின் உறுப்பினர் ஒருவர் பொகவந்தலாவ பொலிஸ் நிலையத்தில் வைத்து மன்னிப்புகோரியுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த மன்னிப்பு கோரிய சம்பவம் 25.04.2025 வெள்ளிக்கிழமை இடம் பெற்றதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரச்சார கூட்டமொன்று கடந்தவாரம் 19ம் திகதி தலவாக்கலை நகரசபை மண்டபத்தில் இடம்பெற்றது,இந்த கூட்டத்திற்கு ஜனாதிபதி அனுரகுமார திஷாநாயக்க கலந்து கொண்டிருந்த வேளையில் தேசிய மக்கள் சக்தியின் பொகவந்தலாவ பிரதேச அமைப்பாளர் குறித்த கூட்டத்தில் உறையாற்றியது சமுக ஊடகங்களில் பேசப்பட்டு வந்தது. இந்த கணொளியினை பார்வையிட்ட இ.தொ.கா வின் உறுப்பினர் ஒருவர் கொழும்பில் இருந்து பொகவந்தலாவ பகுதிக்கு வந்து மூன்று மதுபாண சாலைகளில் மது அருந்திவிட்டு மது போதையில் குறித்த பெண் அமைப்பாளரை தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டு தகாத வார்த்தை பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பாக குறித்த பெண் அமைப்பாளர் பொகவந்தலாவ பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கமைய குறித்த நபர் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட விசாரனைகளின் அடிப்படையில் மன்னிப்பு கோரியதாக பொலிஸார் தெரிவித்தனர் .
