பிமல் ரத்னாயக்கே வெளியிட்டுள்ள அறிவிப்பு

பிமல் ரத்னாயக்கே வெளியிட்டுள்ள அறிவிப்பு

சோதனைகள் இன்றி கொழும்பு துறைமுகத்தில் இருந்து கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டமை தொடர்பில், தமக்கு தொடர்பிருப்பதாக நிரூபிக்கப்பட்டால், தம்மை சிறையில் அடைக்கமுடியும் என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். 

நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய அவர், இந்த சம்பவம் தொடர்பில், தொடர்புடையவர்கள் என்று சந்தேகிக்கப்படுவோர் தொடர்பில், காவல்துறையிடம் முறைப்பாடுகளை மேற்கொள்ளமுடியும் என்று குறிப்பிட்டுள்ளார். 

கொள்கலன்களை விடுவிப்பதற்கு தனக்கு அதிகாரம் இல்லை என்றும், எந்த கொள்கலன்களையும் விடுவிப்பதில் தனக்கு எந்த தொடர்பும் இல்லை என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். 

முன்னதாக இந்த கொள்கலன் விடுவிப்பு விடயத்தில், மேல் மாகாண ஆளுநரை தொடர்புபடுத்த எதிர்க்கட்சியினர் முயற்சித்தனர். அது, இயலாமல் போயுள்ள நிலையில், தம்முடன் அந்தக் குற்றச்சாட்டை இணைக்க எதிர்க்கட்சியினர் முயற்சிப்பதாக பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

manel

Related Posts