52 மில்லியன் பெறுமதியான போதைப் பொருளுடன் வெளிநாட்டு பிரஜை கைது

52 மில்லியன் பெறுமதியான போதைப் பொருளுடன் வெளிநாட்டு பிரஜை கைது

குஷ் போதைப் பொருளுடன் நாட்டிற்குள் நுழைய முற்பட்ட வெளிநாட்டு விமான பயணி ஒருவர் இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபர் சுங்க போதைபபொருள் கட்டுப்பாட்டு துறை அதிகாரிகளால் வருகை முனையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர் தாய்லாந்து நாட்டை சேர்ந்த 34 வயதுடையவர் எனவும் தாய்லாந்து பேங்கொக் நகரில் இருந்து கட்டுநாயக்க விற்கு வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபரின் பயணப் பொதியில் உணவு பொட்டலங்களுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 5 கிலோ மற்றும் 200 கிராம் குஸ் போதை பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் போதைப் பொருளின் பெறுமதி சுமார் 52 மில்லியன் ரூபாய் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளுக்காக சந்தேகம் நபர் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதை பொருள் பிரிவில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

manel