அவசரமாக தரையிறக்கப்பட்ட அமெரிக்க விமானம்
அமெரிக்காவுக்குச் சொந்தமான பயணிகள் விமானமொன்று அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.
வானில் பறந்து கொண்டிருக்கும் போது திடீரென புகை பரவிய நிலையில் லாஸ் வெகாஸ் (Las Vegas) விமான நிலையத்தில் விமானம் தரையிறக்கப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
நெவாடாவில் உள்ள லாஸ் வெகாஸ் (Las Vegas) விமான நிலையத்தில் இருந்து வட கரோலினா மாகாணத்தில் உள்ள சார்லட் டக்ளஸ்க்கு ( Charlotte Douglas ) பயணித்த விமானமே அவசரமாக தரையிறக்கப்பட்டது.
153 பயணிகள் மற்றும் 6 பணியாளர்களுடன் இந்த விமானம் பயணித்துள்ளது.
விமான இயந்திர பகுதியில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறே புகை வெளியேற காரணம் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது

