படகு கவிழ்ந்து விபத்து
காலி மற்றும் களுத்துறை கடற்கரைகளில் படகு கவிழ்ந்ததில் காணாமல் போன 6 கடற்றொழிலாளர்களை தேடுவதற்காக இலங்கை விமானப்படை, பெல் 412 உலங்கு வானூர்தி மற்றும் ஒரு Y-12 விமானத்தை ஈடுபடுத்தியுள்ளது.
பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் உத்தரவின் பேரில் தேடுதல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, சிறப்பு தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

