நீங்க ரொம்ப அழகா இருக்கிறீங்க!
எகிப்து நாட்டில் இடம்பெற்ற சர்வதேச அமைதி மாநாட்டில் இத்தாலி பிரதமர் ஜோர்ஜியா மெலோனியை அழகான பெண் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வர்ணித்துப் பேசியது சமூக ஊடகங்களில் பேசுபொருளாகியுள்ளது.
இந்த மாநாட்டில் இத்தாலி பிரதமர் மெலோனியிடம் மனம் திறந்து பேசிய ட்ரம்ப்,
“நீங்கள் அழகாக இருக்கின்றீர்கள் என்று சொன்னால் கோபப்பட மாட்டீர்கள்தானே? உண்மையில் நீங்கள் ஒரு அழகான பெண் என்று தெரிவித்தார்.
மேலும், இதையே நான் அமெரிக்காவில் பேசியிருந்தால், என்னுடைய அரசியல் வாழ்க்கையே முடிந்திருக்கும் எனவும் ட்ரம்ப் கிண்டலாக தெரிவித்தார்.
ட்ரம்பின் இந்த பேச்சு இணையத்தில் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

