சிறப்புற நடைபெற்ற கிறிஸ்டி ஆர்ட்ஸ் அகாடமியின் பட்டமளிப்பு விழா

சிறப்புற நடைபெற்ற கிறிஸ்டி ஆர்ட்ஸ் அகாடமியின் பட்டமளிப்பு விழா

இலங்கையின் முன்னணி அழகுத் துறை பயிற்சி நிலையமான கிறிஸ்டி ஆர்ட்ஸ் அகாடமியின் விருது மற்றும் பட்டமளிப்பு விழா, கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் அண்மையில் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திர சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.

இந்நிகழ்வின் போது தொழில் பயிற்சி பெற்ற அழகுத் துறை நிபுணர்களான 60 பேர்கள் தமது பட்டங்களையும் விருதுகளையும் பெற்றுக்கொண்டனர்.

இந்நிகழ்வு தொடர்பில் கருத்து தெரிவித்த கிறிஸ்டி ஆர்ட்ஸ் அகாடமியின் தலைவர் பாத்திமா இஷானா இமாம் கூறியதாவது:”ஆறு மாதத்திலிருந்து ஒரு வருட கால அழகுக் கலைத்துறை முழுமையான பயிற்சி பெற்ற மாணவர்களுக்கே இந்த பட்டமளிப்பை வழங்குகிறோம். சுமார் 60க்கும் மேற்பட்ட மாணவர்கள் இம்முறை தகுதிவாய்ந்த அழகுக் கலை நிபுணர்களாக வெளியேறியிருப்பது மிக்க மகிழ்ச்சிகரமான விடயமாகும். இங்கு பயிற்சி பெறும் அனைவரும் தொழில் பயிற்சி ரீதியான தகைமைகளைப் பெற்றுக்கொண்டே எங்கள் நிறுவனத்திலிருந்து வெளியேறுகிறார்கள். இதன் மூலம், அவர்களுக்கு வளமான எதிர்காலமும், தொழில் வாய்ப்புகளும் உருவாகின்றன.”நிகழ்வில், பயிற்சி முடித்த மாணவர்கள் மற்றும் தகுதி பெற்ற அழகுக் கலை நிபுணர்கள் தங்களின் பட்டங்களையும் விருதுகளையும் பெற்றுக்கொண்டனர்.இந்நிகழ்வு, அழகுத் துறையில் தகுதிவாய்ந்த நிபுணர்களை உருவாக்கும் அகாடமியின் நோக்கத்தை முன்னிறுத்தியதோடு, புதிதாகத் தகுதி பெற்றவர்களின் எதிர்கால வெற்றிப்பாதைக்கு வழிகோலும் நிகழ்வாகவும் அமைந்தது.

manel