159வது பொலிஸ் தினத்தை முன்னிட்டு ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் இரத்ததானம்!

159வது பொலிஸ் தினத்தை முன்னிட்டு ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் இரத்ததானம்!

இலங்கை பொலிஸ் தினைக்களத்தின் 159வது பொலிஸ் தினத்தை முன்னிட்டு ஹட்டன் தலைமையக பொலிஸ் நிலையத்தில் இரத்ததான முகாம் ஒன்று 03.09.2025.புதன்கிழமை நிலையத்தின் பொறுப்பதிகாரி W.A.R.D.சுகததாச தலைமையில் இடம்பெற்றது.

இதில் ஹட்டன் பொலிஸ் வலைத்திற்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகர் பிரதீப்வீரசேகர.உதவி பொலிஸ் அத்தியட்சகர் நிஷங்க கொடமுல்ல ஹட்டன் டிக்கோயா நகரசபையின் தலைவர் அசோக்க கருனாரத்ன.

டிக்கோயா ஆதார வைத்தியசாலையின் வைத்தியர்கள் தாதியர்கள் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள்  மதகுரு தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது பொலிஸ் சேவையில் இனைந்து உயிர் நீத்த உத்தியோகத்தர்கள் மற்றும் இரானுவ உத்தியோகத்தர்களுக்கும் ஒரு நிமிடம் நினைவு கூறப்பட்டது.

இதேவேளை ஹட்டன் லயன்கழகம் மற்றும்.எடி.ஏ.என்டர்பிரைசஸ் நிறுவனத்தினர் அனுசரனை வழங்கியிருந்தனர்

இந்த இரத்ததான நிகழ்வில் பொதுமக்கள் மற்றும் சாரதிகள் வர்த்தகர்கள் பொலிஸ் உத்தியோகத்தர்கள் என பலரும் இணைந்து கொண்டு இரத்ததானம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

manel