“அழகான இல்லம்-வளமான குடும்பம்”

“அழகான இல்லம்-வளமான குடும்பம்”

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட “க்ளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் “அழகான இல்லம்-வளமான குடும்பம்” எனும் தொனிப்பொருளில் மலையக மக்கள் வாழும் தொடர் வீடுகளை புனரமைக்கும் வேலைத்திட்டம் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் கீழ் அமுலாக்கப்படுகிறது.

இவ்வேலைத் திட்டத்தின் கீழ் சுமார் 150 தொடர் வீடுகள் புனரமைக்கப்பட உள்ளன.

இவை அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீட்டில் அல்லாமல் அனுசரணையாளர்களின் நிதி பங்களிப்புடன் இத்தொடர்வீடுகள் புனரமைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

மலையக மக்களுக்கான காணி உரிமை மற்றும் நிரந்தர வீடுகளை பெற்று தரும் வரை தற்போது அவர்கள் வசிக்கும் தொடர் குடியிருப்புகளை தற்காலிகமாக புனரமைத்து அந்த மக்கள் வாழ்வதற்கான சுகாதாரமான ஒரு சூழலை உருவாக்கி கொடுப்பதே இத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.

அந்தவகையில் களுத்துறை மாவட்டத்தின் இங்கிரிய பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட றைகம தோட்டத்தில் நேற்று (29/.08/.2025) பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் அவர்களின் ஒருங்கிணைப்பு செயலாளர் சிவநேசன்,களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான வைத்திய கலாநிதி, நிஹால் அபேசிங்க ,தனுஷ்கரங்கநாத், ஓஷானி உமயங்கா,பிரதேசசபை தலைவர்,பிரதேச சபை உறுப்பினர் துசாந்தன் ஆகியோரின் தலைமையில் இவ் செயற் திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

நிகழ்வில் அரச அதிகாரிகள் மற்றும் செயற் திட்டத்திற்கு நிதியுதவி வழங்கிவரும் அனுசரணையாளர்கள், உட்பட பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இவ்வேலைத்திட்டம் மலையகம் முழுவதும் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

manel