கல்கிஸ்ஸ நகரசபை சுகாதார மேற்பார்வையாளர் மீது துப்பாக்கிச் சூடு
தெஹிவளை, எஸ்.டி.எஸ். ஜெயசிங்க மைதானத்திற்கு அருகில் தெஹிவளை – கல்கிஸ்ஸ நகரசபையின் சுகாதார மேற்பார்வையாளர் மீது துப்பாக்கிச் சூட்டு முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எனினும், அந்த முயற்சி தோல்வியடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு தாக்குதல்காரர்கள் சம்பவ இடத்திலிருந்து தப்பியோடியுள்ளதாகவும், காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்

