சாதனை படைக்க போகும் கிரிக்கெட் வீரர்

சாதனை படைக்க போகும் கிரிக்கெட் வீரர்

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. 

குறித்த தொடரில், இதுவரை மூன்று போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில் இங்கிலாந்து அணி 2க்கு ஒன்று என்ற அடிப்படையில் முன்னிலை வகிக்கிறது. 

இதற்கிடையில் இரு அணிகளுக்குமிடையிலான 4 ஆவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் 23 ஆம் திகதி நடைபெறவுள்ளது. 

இந்தநிலையில், சர்வதேச டெஸ்ட் போட்டியில் 13,259 ஓட்டங்களைப் பெற்று 5 ஆவது வீரர் என்ற சாதனையை ஜோ ரூட் பெற்றுள்ளார். 

தொடர்ந்து வரும் 4 ஆவது மற்றும் 5 ஆவது போட்டிகளில் ஜோ ரூட் 30 ஓட்டங்களை பெற்றால் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ஓட்டங்களை பெற்ற ராகுல் டிராவிட்டையும் , 31 ஓட்டங்கள் பெற்றால் ஜேக் காலீசையயும் , 120 ஓட்டங்களை பெற்றால் ரிக்கி பொண்டிங் இன் சாதனையையும் முறியடிப்பார். 

சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ஓட்டங்களை பெற்ற வீரர் என்ற சாதனையை சச்சின் டெண்டுல்கர் இதுவரை தன்வசம் வைத்துள்ளார். 

இவர் 15,921 ஓட்டங்களை பெற்று டெஸ்ட் போட்டியில் முன்னிலையில் உள்ள வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.

manel