தெஹிவளையில் துப்பாக்கி சூடு
தெஹிவளை ரயில் நிலையத்திற்கு அருகில் ஒருவரை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த துப்பாக்கிச்சூடு மோட்டார் சைக்களில் பிரவேசித்த இனந்தெரியாத இருவர் நடத்திவிட்டுச் தப்பிச் சென்றுள்ள நிலையில், துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
45 வயதான நபரே துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளார்.
துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இதுவரை தெரியாத நிலையில், சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

