ஐயப்ப பக்தர்கள் மற்றும் பிரதி அமைச்சருக்கு இடையில் கலந்துரையாடல்
இலங்கையில் உள்ள ஐயப்ப பக்தர்களின் இந்திய யாத்திரையை புனித யாத்திரையாக பிரகடனப்படுத்துவதற்கான அமைச்சரவை அங்கீகாரம் பெற்றுக்கொள்வதற்கு ஏதுவான நடவடிக்கைகள் தொடர்பாக மூன்றாம் கட்ட கலந்துரையாடல் இன்றைய தினம் இடம் பெற்றது.
கொழும்பு மாநகர சபை உறுப்பினர் எஸ்.ஆனந்த குமாரின் வேண்டுகோளுக்கினங்க சாஸ் குரு சுவாமிகள் ஒன்றிய தலைவர் ரவீந்திர குமார் குருசுவாமி,அதன் செயலாளர் கொழும்பு கதிரேசன் வீதி தேவி கருமாரியம்மன் ஆலய பிரதம குரு ரெங்கதாஸ் விஜியானந்த் குருசுவாமி,இலங்கை குருசுவாமிகள் ஒன்றியத்தின் பிரதித் தலைவர் பிச்சை கிருஷ்ணா உள்ளிட்ட ஐயப்ப சுவாமி யாத்திரை குழுவினர்கள் மற்றும் பிரதி அமைச்சரின் ஒருங்கிணைப்பு செயலாளர் வசந்த மூர்த்தி, சிவனேசன் ஆகியோரின் பங்களிப்பில் பெருந்தோட்டம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் அவர்களின் தலைமையில் அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றிருந்தது.








இக் கலந்துரையாடலின் போது யாத்திரையினை இந்து சமய கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தின் நேரடி வழிகாட்டல் மூலம் அவர்களுடைய முழுமையான கண்காணிப்பின் கீழ் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் சுவாமிமார்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் அவர்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்ற சலுகைகள் சம்பந்தமாகவும் விசா தொடர்பான கட்டண பிரச்சினைகள், விமான டிக்கட்டுகள் மற்றும் கடவுச்சீட்டுக்களை பெற்றுக் கொள்வதில் உள்ள பிரச்சினைகள், ஐயப்ப சுவாமி மார்களுக்கான காப்புறுதி தொடர்பாகவும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

