வீதி விபத்துக்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

வீதி விபத்துக்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாட்டில் வீதி விபத்துக்களினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

போக்குவரத்துப் பிரிவுக்கு பொறுப்பான பிரதி காவல்துறைமா அதிபர் இந்திக ஹபுகொட, அரச தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் இதனைத் தெரிவித்துள்ளார். 

இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் மாத்திரம் சுமார் 2,000 பேர் வீதி விபத்துக்களால் உயிரிழந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 

அதேநேரம், 7,152 பேர் காயமடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

முறையற்ற விதத்தில் வாகனம் செலுத்துதல், உள்ளிட்ட செயற்பாடுகளினால் வீதிவிபத்துகள் ஏற்படுகின்றன. 

கடந்த ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் ஜூன் மாதம் 15 ஆம் திகதி வரையில் வீதி விபத்துக்களினால் 1,133 பேர் உயிரிழந்தனர். 

இந்தநிலையில், வாகனங்களில் பொருத்தப்பட்டிருக்கும் அவசியமற்ற மேலதிக உதிரிபாகங்களை நீக்குவது எதிர்வரும் ஜூன் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என காவல்துறை போக்குவரத்துப் பிரிவுக்கு பொறுப்பான பிரதி காவல்துறைமா அதிபர் இந்திக ஹபுகொட தெரிவித்துள்ளார்.

manel