கொடக்கவெல பிரதேச சபைக்கு தலைவர் தேர்வு
இரத்தினபுரி மாவட்டத்தின்
கொடக்கவெல
பிரதேச சபையானது சிங்களம் ,தமிழ், முஸ்லிம் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து மக்கள் நலத்திட்ட பணிகளை மேற்கொள்கின்ற ஒரு பிரதேச சபையாகும்.
கடந்த மே மாதம் 06 ஆம் திகதி இடம்பெற்ற உள்ளூராட்சி சபை தேர்தலில் இரத்தினபுரி மாவட்டம் இறக்குவானை
தேர்தல் தொகுதியின் கொடக்காவெல
பிரதேச சபையை தேசிய மக்கள் சக்தி வெற்றி கொண்டதுடன் அச்சபைக்கான தலைவர், பிரதி தலைவர் தெரிவு இன்றைய தினம்( 21) இடம் பெற்றிருந்தது.
இத்தெரிவின் போது தேசிய மக்கள் சக்தியின் RST கமகே குலரத்னா 16 வாக்குகளைப் பெற்று தலைவராகவும் பிரதீப் அனுரத்த பிரதி தலைவராகவும் தெரிவு செய்யப்பட்டிருந்தார்கள்.
எதிர்க்கட்சியினருக்கு 14 வாக்குகள் மாத்திரமே கிடைக்கப் பெற்றிருந்ததோடு 02 வாக்குகள் நிராகரிக்கப்பட்டிருந்தது.
இறக்குவானை தேர்தல் தொகுதியின் (கொடக்கவெல பிரதேச சபை)
தேசிய மக்கள் சக்தியின் அமைப்பாளராக பெருந்தோட்டம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்க பிரதீப் அவர்கள் செயற்படுகின்ற நிலையில் இவ் சபையின் வெற்றியானது எந்தவித தங்கு தடையுமின்றி மக்களுக்கான பணிகளை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல மீண்டும் பிரதி அமைச்சர் அவர்களுக்கு கிடைக்கின்ற ஓர் அங்கீகாரமே என அவர் சுட்டிக் காட்டியிருந்தார்.

