மலையகத்தில் உள்ள நீர் தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரிப்பு

மலையகத்தில் உள்ள நீர் தேக்கங்களின்  நீர்மட்டம் அதிகரிப்பு

நாட்டில் பெய்து வரும் கன மழையின் காரணமாக மலையகத்தில் உள்ள நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் அதிகரித்துள்ளது.

கடந்த ஒரு மாத காலமாக நிலவும் மழையுடனான வானிலையால் மவுஸ்ஸாக்கலை மற்றும் காசல்ரீ நீர் மின்னுற்பத்தி செய்யும் நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் விரைவாக அதிகரித்து வருகிறது.

மவுஸ்ஸாக்கலை, மற்றும் காசல்ரீ ஆகிய இரு நீர்த்தேக்கங்களின் நீர் மட்டமும் இன்று காலை 16 மற்றும் 12 அடியாக இருந்ததாகவும், அவை நிரம்பி வழியும் நிலையில் உள்ளதாகவும் நீர்த்தேக்கங்களுக்குப் பொறுப்பான பொறியாளர்கள் தெரிவித்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

தேசிய நீர்மின் கட்டமைப்புக்கு சொந்தமான, லக்ஸபான மின் நிலைய வளாகத்தின் கீழ் உள்ள கெனியன், விமலசுரேந்திர, லக்ஸபான, புதிய லக்ஸபான, பொல்பிட்டிய மற்றும் பிரோட்லேண்ட் உள்ளிட்ட மின் உற்பத்தி நிலையங்களுக்கு மவுஸ்ஸாக்கலை மற்றும் காசல்ரீ நீர்த்தேக்கங்களிலிருந்து நீர் விநியோகிக்கப்படுகின்றது.

manel

Related Posts