அஹமதாபாத் விமான விபத்து- பிரதி அமைச்சர் இரங்கல்
இந்தியா குஜராத் அஹமதாபாத் விமான நிலையத்திற்கு அருகில் விபத்துக்குள்ளான எயார் இந்தியா விமானத்தில் பயணம் செய்த மற்றும் மருத்துவ கல்லூரியை சார்ந்தவர்கள் உட்பட 241 பேர் விமான விபத்தில் உயிரிழந்ததாக கிடைத்த செய்தியை இட்டு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்வதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் அவர்கள் தெரிவித்துள்ளார்.
மேலும் மேற்படி விபத்தில் உயிரிழந்த விமான பயணிகள், ஊழியர்கள் மற்றும் மருத்துவக் கல்லூரியைச் சார்ந்த அனைவரது குடும்பத்தினருக்கும் மற்றும் சோகத்தில் ஆழ்ந்துள்ள இந்திய நாட்டு மக்களுக்கு அமைச்சின் சார்பாக தன்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவிப்பதோடு உயிர் நீத்த உறவுகளின் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திப்பதாகவும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் அனைவருக்கும் ஆறுதல்களின் தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.

