தமிழ்நாட்டில் இருந்து வந்த மருத்துவத்துறையை சார் தொழிலதிபர்களுடன் கலந்துரையாடல்
இந்தியாவின் தமிழ்நாட்டில் இருந்து வருகை தந்த மருத்துவத்துறையை சார்ந்த தொழிலதிபர்கள், தகவல் தொழில்நுட்ப பொறியியலாளர்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்களுக்கிடையிலான விசேட கலந்துரையாடல் ஒன்று பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் அவர்களின் தலைமையில் இன்று (03.06.2025) அமைச்சின் அலுவலகத்தில் இடம்பெற்றது.





இதன் போது ஊடகத்துறை சார்பாக திரைப்பட நடிகரும் முன்னணி தொகுப்பாளருமான VJ விஜய் அவர்களும் கலந்து கொண்டிருந்தார்.
இச்சந்திப்பின்போது மருத்துவத்துறை முதலீடுகள் மற்றும் மருத்துவ உதவிகள் தொடர்பாக விசேடமாக கலந்துரையாடப்பட்டதுடன் தமிழ்நாட்டுக்கும் மலையக மக்களுக்கும் இடையேயான ஊடக தொடர்புகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

