ஜூலை 1 முதல் பொது இடங்களில் புகைப்பிடித்தலுக்கு தடை
ஜூலை மாதம் 1 முதல், நாட்டின் அனைத்து பொது வெளிப்புற இடங்களிலும் புகைபிடிப்பது முற்றிலும் தடை செய்யப்படும் என்று பிரெஞ்சு அரசு அறிவித்துள்ளது.
கடற்கரைகள், பூங்காக்கள், பேருந்து நிறுத்தங்கள், பள்ளிகளுக்கு வெளியே மற்றும் விளையாட்டு மைதானங்கள் போன்ற குழந்தைகள் அதிகம் வரும் இடங்களுக்கு இந்தத் தடை முக்கியமாகப் பொருந்தும் என்று அந்நாட்டின் சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சர் கேத்தரின் வௌட்ரின் கூறினார்.

