பஹல்காம் தாக்குதல் – பயங்கரவாதிகளின் படங்கள் வெளியீடு

பஹல்காம் தாக்குதல் – பயங்கரவாதிகளின் படங்கள் வெளியீடு

இந்தியாவில் காஷ்மீரின் முக்கிய சுற்றுலாத் தலமான பஹல்காமில் ரிசார்ட் பகுதி அருகே நேற்று பயங்கரவாதிகள் சுற்றுலாப் பயணிகளைக் குறி வைத்து தாக்குதல் நடத்தினார்கள். 

தாக்குதலில் 2 வெளிநாட்டவர் உட்பட 26 சுற்றுலாப்பயணிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். 

இப்பயங்கர தாக்குதலுக்குப் பாகிஸ்தானைத் தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் அமைப்பான ரெசிஸ்டன்ஸ் ப்ரண்ட் (TRF) பொறுப்பேற்றுள்ளது. 

தாக்குதலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் நான்கு பயங்கரவாதிகளின் புகைப்படத்தை இந்திய பாதுகாப்புப் படையினர் இன்று வெளியிட்டனர். 

இவர்கள் ரெசிஸ்டன்ஸ் ப்ரண்ட் (TRF) அமைப்பை சேர்நதவர்கள் என்று தெரியவந்துள்ளது.

தாக்குதலில் ஈடுபட்ட மூன்று பயங்கரவாதிகளின் ஓவியங்களையும் பாதுகாப்பு படையினர் வெளியிட்டனர். 

அதிகாலையில், பயங்கரவாதிகளில் ஒருவரின் முதல் படமும் ஆன்லைனில் வெளியானது, இந்நிலையில் அந்தப் படத்தில் பயங்கரவாதி ஏகே-47 துப்பாக்கியை வைத்திருப்பதைக் காட்டுகிறது. 

manel