வாகனம் கட்டுப்பாட்டு இழந்ததால் இருவர் பலி

வாகனம் கட்டுப்பாட்டு இழந்ததால் இருவர் பலி

மிஹிந்தலை, வெல்லமோரண பகுதியில் இன்று (15) காலை ஏற்பட்ட விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். 

வண்டியை சாரதியால் கட்டுப்படுத்த முடியாமல், கெப் வண்டி கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றது. 

குறித்த விபத்தில் சாரதியும் மற்றொரு நபரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்கள் 25 மற்றும் 37 வயதுடைய இருவர் என்றும், அனுராதபுரம் மற்றும் பலுகஸ்வெவ பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

manel