பிரதி அமைச்சர் பிரஜா சக்தி உத்தியோத்தர்களுக்கிடையிலான கலந்துரையாடல்
பெருந்தோட் மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சின் கீழ் இயங்கும் பிரஜா சக்தி உத்தியோத்தர்களுக்கிடையிலான கலந்துரையாடல் நேற்று (02) அமைச்சின் கேட்போர் கூடத்தில் பெருந்தோட்டம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தலைமையில் இடம் பெற்றது.








இக்கலந்துரையாடலில் அமைச்சின் செயலாளர் பிரபாத் சந்திரகீர்த்தி, அமைச்சின் பிரத்தியோக செயலாளரும் ஆலோசகருமான கலாநிதி P.P. சிவப்பிரகாசம் மற்றும் அமைச்சின் , அமைச்சரின் ஒருங்கிணைப்பு செயலாளர்களும் கலந்து கொண்டனர்.
இக்கலந்துரையாடலின் போது பிரஜா சக்தி உத்தியோகத்தர்களால் கடந்த கால அடைவுகள், சமகாலத்தில் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் மூடப்பட்ட பிரஜா சக்தி நிலையங்கள் மீள் ஆரம்பித்தல் தொடர்பாக முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு வெகுவிரைவில் தீர்வுகளைப் பெற்றுக் கொடுபாபதற்கு பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் அவர்கள் அமைச்சின் உயர்மட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்திருந்தார்.

