பாடசாலை கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பம்

பாடசாலை கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பம்

இவ்வாண்டுக்கான அரசாங்க பாடசாலைகள் மற்றும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளில் முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் இன்று (01) ஆரம்பமாவதாக  கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

முதலாம் தவணையின் முதல் கட்டம் கடந்த 14ஆம் திகதி முடிவடைந்தது.

ரமலான் பண்டிகையை முன்னிட்டு முஸ்லிம் பாடசாலைகளுக்கு இன்றைய தினம் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், இந்த நாட்களில் குழந்தைகளிடையே சின்னம்மை நோய் பரவுவது குறித்து பெற்றோர்கள் கவனம் செலுத்துமாறு சுகாதாரத் பிரிவு கேட்டுக்கொண்டுள்ளது.

குழந்தை நோய் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் தீபால் பெரேரா குறிப்பிடுகையில், அத்தகைய நோய் அறிகுறிகள் உள்ள குழந்தைகள் இருந்தால், அவர்களை பாடசாலைக்கு அனுப்ப வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளார்.

manel