இரவு நேர சேவையில் இருந்து விலகும் கிராம உத்தியோகஸ்தர்கள்

இரவு நேர சேவையில் இருந்து விலகும் கிராம உத்தியோகஸ்தர்கள்

பாதுகாப்பினை கருத்தில் கொண்டு அனைத்து பெண் கிராம உத்தியோகஸ்தர்களும் இரவு நேர சேவைகளிலிருந்து விலகுவதாக இலங்கை கிராம உத்தியோகஸ்தர் சங்கம் தெரிவித்துள்ளது.

பாதுகாப்பற்ற மற்றும் மக்கள் வசிக்காத பகுதிகளில் இயங்கும் அலுவலகங்களை மூடுவதற்கும், பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்ட இடத்திலிருந்து அலுவலகப் பணிகளை மேற்கொள்ளவும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என இலங்கை கிராம உத்தியோகஸ்தர் சங்கத்தின் கொழும்பு மாவட்ட தலைவர் சாமலி வத்சலா குலதுங்க தெரிவித்துள்ளார்.

இரவு நேர பணியாற்றும் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல் ராஜ் நேற்று கண்டி பிரதேசத்தில் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பிய போது தெரிவித்துள்ளார்.

manel