ஆட்டுக்கு புல் அறுக்க சென்ற நபர் சடலமாக மீட்பு.

ஆட்டுக்கு புல் அறுக்க சென்ற நபர் சடலமாக மீட்பு.

பொகவந்தலாவ லெச்சுமிதோட்டம் மத்திய பிரிவு பத்தாம் இலக்க தேயிலை தோட்டத்திற்கு அருகாமையில் உள்ள கால்வாய் ஒன்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சடலம் நேற்று செவ்வாய்கிழமை இரவு மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த நபர் நேற்றுக்காலை ஆட்டுக்கு புல் அறுக்க சென்றவர் இரவு ஏழு மணி வரை வீடு திரும்பாத நிலையில் தோட்ட பொதுமக்கள் இணைந்து தேடும் நடவடிக்கையில் ஈடுபட்ட போது கால்வாய் ஒன்றில் விழுந்து உயிரிழந்துள்ளதை பொதுமக்கள் பொகவந்தலாவ பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸார் விசாரனைகளை ஆரம்பித்ததோடு தடைவியல் பொலிஸாரும் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர்.

சடலமாக மீட்கப்பட்ட நபர் பொகவந்தலாவ லெட்சுமி தோட்டம் மத்திய பிரிவை சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான 57வயதுடைய சிவனு பாக்கியநாதன் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

சடலம் சட்டவைத்திய அதிகாரியின் பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பொகவந்தலாவ நிருபர்.எஸ்.சதீஸ்

manel