தன்னை கைது செய்வதை தடுக்க கோரி தேசபந்து ரிட் மனு

தன்னை கைது செய்வதை தடுக்க கோரி தேசபந்து ரிட் மனு

முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் சட்டத்தரணிகள் ஊடாக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டு மாத்தறை வெலிகம டபிள்யூ 15ஆவது ஹோட்டலில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக அவரை கைது செய்யுமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை இடை நிறுத்தி இடைக்கால தடை உத்தரவை பிறக்கும் பிறவிக்குமாறு குறித்த மனுவில் அவர் கோரியுள்ளார்.

குறித்த மனு இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பதில் நீதியரசர் முகமட் லாபர் தாஹிர் மற்றும் சரத் திசாநாயக்க ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு முன்னிலையில் அழைக்கப்பட்டது.

இதன் போது பிரதிவாதிகளுக்கு அழைப்பானை விடுத்த பின், குறித்ச மனுவை எதிர்வரும் 12 ஆம் திகதி பரிசீலனைக்கு அழைத்த நீதி அரசர்கள் அமர்வு உத்தரவிட்டது.

manel