உளுந்து வடைக்குள் சட்டைப்பின்..!
வவுனியாவில் உள்ள உணவகம் ஒன்றில் வாடிக்கையாளர் ஒருவர் வாங்கிய உளுந்து வடையில் சட்டை பின் ஒன்று இருந்த சம்பவம அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



குறித்த உணவகத்திலிருந்து வாடிக்கையாளர் உளுந்து வடையை வீட்டிற்கு எடுத்துச் சென்று சாப்பிட தயாராகும் போதே உளுந்து வடைக்குள் சட்டை பின் இருப்பதை கவனித்துள்ளார்.
பின்பு, உணவகத்தின் உரிமையாளரை சந்தித்து இது குறித்து தெரிவித்ததையடுத்து உணவக உரிமையாளர் வாடிக்கையாளரிடம் மன்னிப்பு கேட்டுள்ளதோடு உளுந்து வடைக்கு பெற்றுக்கொண்ட பணத்தையும் திருப்பி கொடுத்துள்ளார்.

