நிர்வாணமாக மோட்டார் வண்டியில் பயணித்த ஒருவர் கைது

நிர்வாணமாக மோட்டார் வண்டியில்  பயணித்த ஒருவர்  கைது

கொழும்பில் இருந்து கண்டி நோக்கி நிர்வாணமாக மோட்டார் வண்டியில் பயணித்த ஒருவர் கடுகன்னாவ பொலிஸாரால் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் 23 வயதுடைய அஹங்கம பகுதியைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

கண்டி-கொழும்பு வீதியில் பயணித்த இந்த நபரை பொலிஸார் கண்காணித்து பிடிக்க முற்பட்ட போதிலும் தப்பிச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

கடுகன்னாவ மற்றும் பேராதனை பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து வீதித் தடைகளைப் பயன்படுத்தி குறித்த மோட்டார் வண்டியை நிறுத்தியுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர் இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

manel