காதலியின் வீட்டில் இருந்து வீடு திரும்பும் இப்போது இளைஞன் பழி
பண்டாரகமவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.
இன்று அதிகாலை நடந்த இந்த விபத்தில் உயிரிழந்தவர் பண்டாரகம, அந்துன்வென்ன பகுதியைச் சேர்ந்த 26 வயதான கடற்படை உறுப்பினர் என தெரியவந்துள்ளது.
உயிரிழந்த இளைஞன் பண்டாரகம, வேவிட்ட பகுதியில் உள்ள தனது காதலியின் வீட்டில் இருந்து வீடு திரும்பும் போது இந்த விபத்தை சந்தித்துள்ளார். அவர் பயணித்த கார் வீதியை விட்டு விலகி, ஒரு மின்சார தூணுடன் மோதி, சுமார் 15 அடி பள்ளத்தில் பாய்ந்துள்ளது.
அந்த நேரத்தில், வீதியில் பயணித்த பல வாகனங்களின் சாரதிகள் விபத்து நடப்பதைக் கண்டு, பிரதேசவாசிகளுக்கு தகவல் தெரிவித்து, காரில் சிக்கிய இளைஞனை மருத்துவமனையில் அனுமதிக்க நடவடிக்கை எடுத்த போதும் அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
சாரதிக்கு நித்திரை கலக்கம் ஏற்பட்டதால் இந்த விபத்து இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

