புதுடெல்லியில் நெரிசல், 18 பேர் பலி

புதுடெல்லியில் நெரிசல், 18 பேர் பலி

புதுடெல்லி புகையிரத நிலையத்தில் நேற்று இரவு திடீரென ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குறைந்தது 18 பேர் உயிரிழந்தனர். 

உயிரிழந்தவர்களில் 11 பெண்கள் மற்றும் 04 குழந்தைகளும் அடங்குவதுடன் மேலும் பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

உத்தர பிரதேசம் பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளா செல்வதற்காக ஒரே நேரத்தில் அதிக அளவில் பயணிகள் கூடியதால் இந்த நெரிசல் ஏற்பட்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 

நெரிசல் குறித்து தகவலறிந்து அங்கு வந்த தீயணைப் பிரிவினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு, நெரிசலில் சிக்கி காயமடைந்தவர்களை வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நெறிசலில் சிக்கி உயிரழந்தவர்களின் குடும்பத்துக்கு இந்திய பிரதமர் மோடி, அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், டெல்லி துணை நிலை ஆளுநர் உள்பட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

manel