நீர் கட்டணம் குறைக்க நடவடிக்கை
அண்மையில் மின்சாரக் கட்டணம் குறைக்கப்பட்டமைக்கு அமைய, தற்போது நீர் கட்டணங்களைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
நீர் கட்டண குறைப்பு சதவீதத்தை ஆராய அண்மையில் குழுவொன்று நியமிக்கப்பட்டிருந்தது.குறித்த குழுவின் அறிக்கை வெள்ளிக்கிழமைக்குள் சபையின் தலைவரிடம் சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து, மேலதிக நடவடிக்கைகளுக்காக குறித்த அறிக்கை அமைச்சரிடம் சமர்ப்பிக்கப்படும் எனவும், அடுத்த மாதத்திற்குள் புதிய நீர் கட்டணக் குறைப்பு அறிவிக்கப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை சுட்டிக்காட்டியுள்ளது.

