தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்திற்கு புதிய பயிலுனர் மாணவர்களை உள்வாங்கும் நிகழ்வு.

தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்திற்கு புதிய பயிலுனர் மாணவர்களை உள்வாங்கும்  நிகழ்வு.

2025ஆம் ஆண்டுக்கான தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்திற்கான புதிய பயிலுனர் மாணவர்களை உள்வாங்கும் நிகழ்வு 31.01.2025.வெள்ளிக்கிழமை தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதிகளாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் கே.வி.சமந்த வித்தியாரத்ன, பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப், தேசிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கிருஷ்ணன் கலைச்செல்வி, பிரதி அமைச்சின் செயலாளர் கலாநிதி சிவபிரகாசம், அமைச்சின் கணக்காளர் அமைச்சின் பணிப்பாளர், தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தின் அதிபர் மற்றும் உத்தியோகத்தர்கள் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

மேலும், இந் நிகழ்வில் மாணவர்களை உள்வாங்கும் நிகழ்வில் 265மாணவர்கள் உள்வாங்கப்பட்டனர்.

இதில் கண்டி ,நுவரெலியா மாத்தளை, கேகாலை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மாணவர்கள் உள்வாங்கப்பட்டனர்.

மரக்கன்றுகளும் நாட்டி வைக்கப்பட்டதோடு மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றது.

இந்த நிகழ்வின் போது அமைச்சர் பிரதி அமைச்சர். பாராளுமன்ற உறுப்பினர் ஆகியோர் உரையாற்றினர்.

manel