சப்ரகமுவ மாகாணத்தின் அபிவிருத்தி தொடர்பாக கலந்துரையாடல்.
சப்ரகமுவ மாகாணத்தின் இரத்தினபுரி , கேகாலை ஆகிய மாவட்டங்களில் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுப்பது தொடர்பாக சப்ரகமுவ மாகாண ஆளுநருக்கும் இரத்தினபுரி , கேகாலை மாவட்டங்களில் உள்ள அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று நேற்றையதினம்(30) இரத்தினபுரியில் அமைந்துள்ள சப்ரகமுவ மாகாண சபையின் கட்டிடத் தொகுதியில் இடம்பெற்றது.





இதன்போது இரத்தினபுரி, கேகாலை மாவட்டங்களில் உள்ள மலையக பாடசாலைகளுக்கு காணிகள் பெற்று கொடுப்பது சம்பந்தமாகவும் மற்றும் மலையக பாடசாலைகள் அபிவிருத்தி தொடர்பாகவும், இரத்தினபுரி, கேகாலை மாவட்டங்களில் உள்ள மலையகப் பகுதிகளில் சேதமடைந்துள்ள வீதிகளை அபிவிருத்தி செய்வது தொடர்பாகவும், மலையக மக்களுக்கான மலசலகூட வசதிகள் மற்றும் மருத்துவ சேவைகள், சுயதொழில் வேலைவாய்ப்பு, கால்நடை வளர்ப்பு, விவசாயம் உட்பட பல்வேறு அபிவிருத்தி திடடங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இரத்தினபுரி, கேகாலை மாவட்டங்களில் உள்ள மலையக பாடசாலைகள் உட்பட மலையக பகுதிகளுக்கான சகல அபிவிருத்திப் பணிகளையும் விரைவில் முன்னெடுக்குமாறு மாகாண சபை அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக்கலந்துரையாடலில் சப்ரகமுவ மாகாண பிரதான செயலாளர் மற்றும் மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களின் செயலாளர்கள் உட்பட அரச அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

