மக்களே ஏமாற வேண்டாம் – கணினி அவசர செயற்பாட்டுப் பிரிவு..!
பணம் வழங்குவதாகக் கூறி கையடக்கத் தொலைபேசிகளுக்கு வரும் குறுஞ்செய்திகள் மற்றும் தொலைபேசி அழைப்புக்களுக்கு ஏமாற வேண்டாம் என இலங்கை கணினி அவசர செயற்பாட்டுப் பிரிவு (SLCERT) பொது மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
போலியான தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டு பணம் வசூலிப்பவர்கள் குறித்து தகவல் கிடைத்துள்ளதாக அதன் சிரேஷ்ட பொறியியலாளர் சாருக தமுனுகல தெரிவித்துள்ளார்.
மேலும் சமீபத்தில் சைபர் தாக்குதலுக்கு உள்ளான அரச அச்சகத்திணைக்களத்தின் இணையத்தளம் குறித்து சாருக தமுனுகல தனது கருத்துக்களைத் தெரிவித்தார்.
“இந்த சைபர் தாக்குதல் குறித்த இணையத்தளத்தில் உள்ள பல பலவீனங்களால் ஏற்பட்டிருக்கலாம் என்பதை நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம் இதை விரைவில் வழமைக்கு கொண்டுவருவோம்” என்றார்.

