இரத்தினபுரி பிரபல தமிழ் பாடசாலையின் அதிபரை அச்சுறுத்திய தனியார் வகுப்பு ஆசிரியர் கைது

இரத்தினபுரி பிரபல தமிழ் பாடசாலையின் அதிபரை அச்சுறுத்திய தனியார் வகுப்பு ஆசிரியர் கைது – எதிர்வரும் 23ஆம் தேதி வரை விளக்கமறியல்!

இரத்தினபுரியில் உள்ள பிரபல தமிழ் பாடசாலை ஒன்றின் அதிபரை அச்சுறுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர் ஒருவர், பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதிபர் அவர்களால் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில், இரத்தினபுரி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு குறித்த ஆசிரியரை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட ஆசிரியர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, அவரை எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக பாடசாலை வட்டாரத்திலும், பெற்றோர்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பாடசாலை ஒன்றின் அமைதியான சூழலில் இவ்வாறான சம்பவம் இடம்பெற்றிருப்பது குறித்து பலரும் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை இரத்தினபுரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

manel