உந்துருளியுடன் கால்வாயில் விழுந்து இளைஞர் ஒருவர் பலி!

உந்துருளியுடன் கால்வாயில் விழுந்து இளைஞர் ஒருவர் பலி!

வாரியபொல, பாதெனிய – புத்தளம் வீதியின் சேனரத்கம பகுதியில் உந்துருளியுடன் கால்வாயில் விழுந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வாரியபொல காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

நேற்று (08) மாலை இடம்பெற்ற இந்த விபத்து தொடர்பில் காவல் நிலையத்துக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்த விபத்தில் உயிரிழந்தவர் பொகம்மன்ன பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

நிலவிய சீரற்ற வானிலை காரணமாக உந்துருளியை கட்டுப்படுத்த முடியாமல் போனதால், அது கால்வாய்க்குள் விழுந்து விபத்து ஏற்பட்டிருக்கலாம் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாரியபொல காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

manel