மான் ஒன்று தாக்கியதில் கைதி பலி!
வீரவில திறந்தவெளி சிறைச்சாலையில் புனர்வாழ்வு பெற்றுவந்த கைதியொருவர் மான் ஒன்று தாக்கியதில் உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் சிறைச்சாலை வளாகத்தில் துப்புரவுப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அங்கு சுதந்திரமாகத் திரிந்த மான் ஒன்று அவரை தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது காயமடைந்த அவர் தெம்பரகவெவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் வரபலான பகுதியைச் சேர்ந்த 30 வயதுடையவராவார்.
உயிரிழந்தவரின் சடலம் தெம்பரகவெவ வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இன்று (09) பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.
இச்சம்பவம் குறித்து வீரவில பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

