ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற தடுப்பு சட்டமூலத்திற்கு எதிரான மனுக்கள் இன்றும் விசாரணைக்கு
அரசாங்கத்தால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டமூலத்தின் சில சரத்துகள் அரசியலமைப்புக்கு முரணானவை எனத் தீர்ப்பளிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் இன்று (09) உயர் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.
பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன, அச்சல வெங்கப்புலி மற்றும் சம்பத் அபேகோன் ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர் குழாம் முன்னிலையில் இந்த மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.
இந்த மனுக்கள் கடந்த முறை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, குறித்த சட்டமூலம் தொடர்பில் முன்மொழியப்பட்ட திருத்தங்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை எழுத்துப்பூர்வ சமர்ப்பணங்களாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு மனுதாரர் தரப்புக்கு நீதிமன்றம் அறிவித்திருந்தது.
இதற்கமைய, சட்டத்தரணிகளால் தங்களது எழுத்துப்பூர்வ சமர்ப்பணங்கள் கடந்த வியாழக்கிழமை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
இதனைத் தொடர்ந்து, குறித்த மனுக்கள் மீதான விசாரணை இன்று இரண்டாம் நாளாக மீண்டும் ஆரம்பமாகவுள்ளது.
குறித்த சட்டமூலத்தை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் 26 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

