காலி மீன்பிடித் துறைமுகத்தில் இன்று (8) பிற்பகல் தீ விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது.
அங்குள்ள படகு பராமரிப்புத் தளத்தில் நிறுத்தப்பட்டிருந்த படகு ஒன்றில் இந்தத் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தீயைக் கட்டுப்படுத்துவதற்காக 2 தீயணைப்பு வாகனங்கள் இதுவரை வருகை தந்துள்ளன.