தங்கத்தின் விலையில் வீழ்ச்சி!
உள்நாட்டு சந்தையில், நேற்றைய விலையுடன் ஒப்பிடுகையில் இன்று தங்கத்தின் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய, 24 கரட் தங்கம் பவுண் ஒன்றின் விலை இரண்டாயிரம் ரூபாயினால் வீழ்ச்சியடைந்து தற்போது, 3 இலட்சத்து 60 ஆயிரம் ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
இதனிடையே, நேற்று ஒரே நாளில் 24 கரட் தங்கம் பவுண் ஒன்றின் விலை பத்தாயிரம் ரூபாயினால் அதிகரித்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.
இதேவேளை, 22 கரட் தங்கம் பவுண் ஒன்றின் விலை ஆயிரத்து 900 ரூபாயினால் வீழ்ச்சியடைந்து, 3 இலட்சத்து 36 ஆயிரத்து 700 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
இதனிடையே, சர்வதேச சந்தையில் இன்று ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை அதிகரித்து, நான்காயிரத்து 45 டொலர்களாக விற்பனையாகின்றமை குறிப்பிடத்தக்கது.

