மஹியங்கனை மக்களுக்கு 7,500 தென்னங்கன்றுகள் விநியோகம்!

மஹியங்கனை மக்களுக்கு 7,500 தென்னங்கன்றுகள் விநியோகம்!
  • நாட்டின் தேங்காய் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் வீட்டுத் தோட்டப் பயிர்ச்செய்கைத் திட்டம்

நாட்டின் தேங்காய் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில், வீட்டுத் தோட்டங்களில் தென்னைப் பயிர்ச்செய்கையை ஊக்குவிப்பதற்காக மஹியங்கனை பிரதேச மக்களுக்கு 7,500 தென்னங்கன்றுகள் விநியோகிக்கப்பட்டன.

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சின் கீழ் இயங்கும் தென்னைப் பயிர்ச்செய்கைச் சபையினால் முன்னெடுக்கப்படும், வீட்டுத் தோட்டப் பயிர்ச்செய்கைக்காக 5 இலட்சம் தென்னங்கன்றுகளை விநியோகிக்கும் திட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கமைய, மஹியங்கனை பிரதேச செயலகப் பிரிவைச் சேர்ந்த மக்களுக்கான தென்னங்கன்றுகள் விநியோக நிகழ்வு நேற்று (01) மஹியங்கனை பல்நோக்குக் கட்டடத்தில் நடைபெற்றது.

வீட்டுத் தோட்டங்களில் தென்னைப் பயிர்ச்செய்கையைப் பரவலாக்குவதுடன், தேசிய தேங்காய் உற்பத்திக்கு மக்களின் பங்களிப்பை அதிகரிப்பதும் இத்திட்டத்தின் முக்கிய நோக்கங்களாகும்.

இந்நிகழ்வில் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுதத் பாலகல்ல, மஹியங்கனை பிரதேச சபைத் தலைவி சட்டத்தரணி உபேக்ஷா விஜேதுங்க, மஹியங்கனை பிரதேச செயலாளர் உள்ளிட்ட அரச அதிகாரிகள் மற்றும் பிரதேச மக்கள் கலந்துகொண்டனர்.

manel