36 ஆவது தேசிய இளைஞர் விளையாட்டு விழா தியகமவில் ஆரம்பம்
36 ஆவது தேசிய இளைஞர் விளையாட்டு விழா இம்முறை ஹோமாகம தியகம மஹிந்த ராஜபக்ச சர்வதேச மைதானத்தில் வெகு விமரிசையாக ஆரம்பமானது.
தேசிய இளைஞர் சேவைகள் மன்றம், இளைஞர் விவகார மற்றும் விளையாட்டு துறை அமைச்சு மற்றும் இலங்கை இளைஞர் கழக சம்மேளனம் ஆகிய இணைந்து 36 வது முறையாகவும் ஏற்பாடு செய்திருக்கும்,
இவ்விளையாட்டு விழாவின் ஆரம்ப நிகழ்வு இலங்கை பாராளுமன்றத்தின் அவைத்தலைவரும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க மற்றும் இளைஞர் விவகார விளையாட்டு துறை அமைச்சர் சுனில்குமார கமகே ஆகியோரின் தலைமையில் ஆரம்பமானது.
அதே வேளை இளைஞர் விவகார பிரதி அமைச்சர் தினிந்து சமன் ஹென்னாயக்க மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைவர் பணிப்பாளர் நாயகம் சட்டத்தரணி சுப்புன் விஜேரத்ன உள்ளிட்ட பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் 26 நிர்வாக மாவட்டங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி சுமார் 2500 க்கும் மேற்பட்ட இளைஞர் யுவதிகளின் பங்குப்பற்றலுடன் இவ் ஆரம்பநிகழ்வு நடைபெற்றது.
இவ் ஆரம்ப நிகழ்வை தொடர்ந்து இவ் விளையாட்டு விழாவில் முதலாவது போட்டி நிகழ்வான ஆண்களுக்கான10000M ஓட்டப் போட்டி நடைபெற்றது.
இப்போட்டியில் காலி மாவட்டத்தை சேர்ந்த D. P. S. S. சேனாநாயக்க 33:11.6 நிமிமிடங்களில் போட்டியை நிறைவு செய்து முதலாம் இடத்தினை பெற்று தங்கப்பதக்கத்தினை பெற்று க்கொண்டத்துடன் இரண்டாம் இடத்தினை கண்டி மாவட்டத்தின் குண்டசாலை பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட கிராம உத்தியோகத்தர் பிரிவின் டைட்டன்ஸ் இளைஞர் கழகத்தின் R. யதீஷன் 33:12.3 நிமிடங்களில் நிறைவு செய்து இரண்டாம் இடத்த்தில் வெள்ளிப் பதக்கத்தினையும் பெற்றுக்கொண்டார். அத்துடன் மூன்றாம் இடத்தில் களுத்துறை மாவட்டத்தின் M. S. மொஹமட் 33:48.7 நிமிடங்களில் போட்டியை நிறைவு செய்து வெண்கல பதக்கத்தினையும் பெற்றுக் கொண்டனர்.35:36.7 நிமிடங்களில் நிறைவு செய்த பதுளை மாவட்டத்தின் G. தனுஷன் நான்காம் இடத்தினையும் பதிவு செய்திருப்பினும் அவரால் எவ்விதபதக்கத்தையும் பெற முடியாமல் போனதும் குறிப்பிடத்தக்கது.

