லாஃப் விநியோகம் இல்லைநுவரெலியா மாவட்டத்தில் நுகர்வோர் அவதி!

லாஃப் விநியோகம் இல்லைநுவரெலியா மாவட்டத்தில் நுகர்வோர் அவதி!

நுவரெலியா மாவட்டத்திற்கு மாதங்களாக மாதங்களுக்கும் மேலாக லாஃப் சமையல் எரிவாயு விநியோகிக்கப்படாததால், எரிவாயு விற்பனை முகவர்கள் மற்றும் நுகர்வோர் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நீண்டகாலமாக விநியோகம் இடம்பெறாததால், எரிவாயுவைப் பெற்றுக்கொள்வதில் நுகர்வோர் சிரமங்களை எதிர்நோக்குவதுடன், விற்பனை முகவர்களும் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

லாஃப் எரிவாயு தொடர்ந்து பாவித்து வந்தவர்கள் பெரிதும் பாதிக்க பட்டு வருகின்றனர் சம்பந்தப்பட்ட எரிவாயு தொடர்ந்து தட்டுப்பாடு நிலவும் பட்சத்தில் அரசாங்கம் லாஃப் எரிவாயு நிறுவனம் மற்றும் ஒப்பந்த காரர்களிடம் இருந்து பொறுப்பேற்று லிட்ரோ எரிவாயு நிறுவனத்துடன் இணைத்து பாவனையாளர்களுக்கு தொடர்ந்து தட்டுப்பாடு இல்லாமல் எரிவாயு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வர்த்தக அமைச்சர் மற்றும் நிதி அமைச்சர் என்ற வகையில் அதி மேதகு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அவர்கள் முன் வர வேண்டும்.

மஸ்கெலியா நிருபர்

manel