தெற்கு அந்தமான் கடல் பகுதியில் புதிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்

தெற்கு அந்தமான் கடல் பகுதியில் புதிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்

தெற்கு அந்தமான் கடல் பகுதியில் வட சுமாத்திரா தீவுகளுக்கு அருகில் நிலவிய வளிமண்டலக் கீழடுக்கில் ஏற்பட்ட சுழற்சி, இன்று (29) முற்பகல் 11.30 அளவில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுவடைந்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, எதிர்வரும் 31ஆம் திகதியளவில் தென்கிழக்கு வங்காள விரிகுடா மற்றும் அதனை ஒட்டிய அந்தமான்-நிகோபார் தீவுகள் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளுக்கு மேல் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகச் செறிவடையும் சாத்தியக்கூறுகள் அதிகமாக உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து, இது மேலும் வலுவடைந்து, அடுத்த 2 நாட்களில் இந்தியாவின் ஆந்திரப் பிரதேசக் கரையை நோக்கி மேற்கு-வடமேற்கு திசையில் தொடர்ந்து நகர வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

“எச்சரிக்கை” பிரிவின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள கடல் பகுதிகளில் காற்றின் வேகம் இடைக்கிடையே மணித்தியாலத்துக்கு 55 கிலோமீற்றர் வரை அதிகரிக்கும் என்பதுடன், அந்தக் கடற்பகுதிகள் இடைக்கிடையே கொந்தளிப்பாகவும் காணப்படும்.

எனவே, இந்தக் கடல் பகுதிகளில் நடவடிக்கைகளில் ஈடுபடும் கடற்படையினர் மற்றும் கடற்றொழிலாளர்கள் அவதானத்துடன் செயல்படுமாறும், இது தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களத்தால் வெளியிடப்படும் எதிர்கால முன்னறிவிப்புகள் மற்றும் அறிவித்தல்கள் குறித்து விழிப்புடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்படுகின்றனர்.

manel