அவுஸ்திரேலிய வீராங்கனைக்கு கிரிக்கெட் விளையாடத் தடை!
போட்டி இல்லாத காலப்பகுதியில், செயல்திறனை அதிகரிக்காத மருந்துகள் தொடர்பான கடுமையான விதிகளைப் பின்பற்றத் தவறியதற்காக, அவுஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மேகன் ஷட் (Megan Schutt) இரண்டு போட்டிகளில் விளையாட அந்த நாட்டு கிரிக்கெட் சபை தடை விதித்துள்ளது.
பங்களாதேஷ் தொடருக்கு முன்னதாக அவுஸ்திரேலிய அணிக்கு வழங்கப்பட்ட ஓய்வு காலத்தில் இடம்பெற்ற ஒரு சம்பவத்திற்காக 33 வயதான மேகன் ஷட்டிற்கு இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
அவர் குறித்த குற்றத்தை ஏற்றுக்கொண்டதைத் தொடர்ந்து, நியூசிலாந்துக்கு எதிரான 3வது டி20 போட்டி மற்றும் அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணிக்காக விளையாடும் மகளிர் பிக் பேஷ் லீக் தொடரின் தொடக்கப் போட்டியில் விளையாட அவருக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
விளையாட்டு அறிவியல் மற்றும் விளையாட்டு மருத்துவ வழிகாட்டுதல்களின் கீழ், பரிந்துரைக்கப்பட்ட மருந்துகள் தொடர்பிலான விதிமுறைகளைப் பின்பற்றத் தவறியமையே இந்த விதிமீறலாகும் என அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
இது போட்டி இல்லாத காலப்பகுதியில் நடந்த ஒரு சம்பவத்துடன் தொடர்புடையதுடன், செயல்திறனை அதிகரிக்கும் நோக்கத்திற்காகப் பயன்படுத்தப்பட்டது அல்ல.
இந்த இரண்டு போட்டிகளுக்கான தடையில் அனைத்து சர்வதேச மற்றும் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளும் அடங்கும்.
மேகனுக்குத் தேவையான பொருத்தமான ஆதரவை நாங்கள் தொடர்ந்து வழங்குவதுடன், நமது விளையாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒவ்வொருவரிடமிருந்தும் எதிர்பார்க்கப்படும் தரநிலைகள் மற்றும் பொறுப்புகளை மீண்டும் வலியுறுத்துவோம் எனவும் அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
இந்த சம்பவத்திற்கான மேகன் ஷட் மன்னிப்பு கோரியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

