கிரகரி வாவியில் அனர்த்தம் – மயிரிழையில் உயிர்காத்த கடற்படை!

கிரகரி வாவியில் அனர்த்தம் – மயிரிழையில் உயிர்காத்த கடற்படை!

நுவரெலியா – கிரகரி வாவியில் ஜெட் ஸ்கீ (Jet ski) படகில் நீர் விளையாட்டில் ஈடுபட்டிருந்த போது ஏற்பட்ட படகு விபத்தில், அனர்த்தத்திற்குள்ளான இரண்டு சிறுவர்களை கடற்படையினர் பாதுகாப்பாக மீட்டுள்ளனர். 

நேற்று (16) இடம்பெற்ற இந்த விபத்தின் போது, வாவியில் சுற்றாடல் பாதுகாப்பு மற்றும் உயிர்காப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த கடற்படையின் விரைவு மீட்புக் பிரிவினரால் குறித்த இரண்டு சிறுவர்களும் மீட்கப்பட்டுள்ளனர். 

மினுவாங்கொடை பகுதியைச் சேர்ந்த 11 மற்றும் 13 வயதுடைய சிறுவர்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளனர். 

குறித்த சிறுவர்கள் இருவரும் நுவரெலியா பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

manel